லாரி மீது வாகனம் மோதி 2பேர் பலி

ஈரோடு, ஜூன் 25:  சேலம் மாவ்டடம் பனைமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் துரைசாமி(27). கட்டிட மேஸ்திரி. இவர் தனது உறவினரான ஈரோடு பெரியசேமூர் பகுதியை சேர்ந்த ஓட்டல் ஊழியரான சக்திவேல்(35) என்பவருடன் டூவீலரில் பெருந்துறைக்கு சென்றனர். நேற்று முன்தினம் மதியம் பெருந்துறையில் இருந்து பெரியசேமூர் செல்வதற்காக வந்து கொண்டிருந்தனர். டூவீலரை துரைசாமி ஓட்டினார். பெருந்துறை அடுத்த வாவிக்கடை பம்பிங் ஸ்டேஷன் பகுதியில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக ரோட்டோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டேங்கர் லாரியின் பின்பகுதியில் டூவீலர் மோதியது. இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து  பெருந்துறை போலீசார், இறந்த இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags :
× RELATED லாரி மோதி உயிரிழந்த எலக்ட்ரீசியன்...