பணம் வைத்து சூதாடி கைதான போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட்

ஈரோடு, ஜூன் 25:  ஈரோட்டில் பணம் வைத்து சூதாடியதாக கைதான போலீஸ் ஏட்டு வெள்ளியங்கிரியை சஸ்பெண்ட் செய்து எஸ்பி., சக்தி கணேசன் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு ஆணைக்கல்பாளையம் ரிங் ரோடு அருகே உள்ள ஒரு மனமகிழ் மன்றத்தில் பணம் வைத்து சூதாடி வருவதாக வந்ததாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், ஈரோடு டவுன் டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு பணம் வைத்து சூதாடி ஈரோடு ஆயுதப்படை பிரிவு ஏட்டாக பணிபுரியும் கோபி கள்ளிப்பட்டி அடசபாளையம் பகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி(32), ஈரோடு பிரியா தோட்டம் பகுதியை சேர்ந்த குமார் என்ற விஜயகுமார்(46), ஈரோடு செங்கோடம்பள்ளம் பகுதியை சேர்ந்த பிரதீப்(28), பழையபாளையம் இந்து நகரை சேர்ந்த சதீஸ்(34) ஆகிய 4பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 2லட்சத்து 25ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து ஈரோடு எஸ்பி சக்திகணேசனிடம் கேட்டபோது, கைதான வெள்ளியங்கிரி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது துறைவாரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சார்ஜ் சீட் அளிக்கப்படும், என்றார்.

Tags :
× RELATED பணம் பறித்த வாலிபர் கைது