முதுநிலை கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு

ஈரோடு, ஜூன் 25: தமிழகம்  முழுவதும் காலியாக உள்ள 814 முதுநிலை கம்ப்யூட்டர் ஆசிரியர்  பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டது. அதற்கான தேர்வு தமிழகம் முழுவதும் நடந்தது.
இந்த  தேர்வில் பல்வேறு இடங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வு எழுத  முடியாமல் தவித்தனர். ஈரோடு மாவட்டத்தில் முதுநிலை கம்ப்யூட்டர் ஆசிரியர்கள்  தேர்வு 3 மையங்களில் நடந்தது.
இந்த தேர்வினை மாவட்டம் முழுவதும் ஆயிரத்து  837 பேர் கலந்து கொண்டு எழுதினார்கள். மாவட்டத்தில் கொங்கு பொறியியல்  கல்லூரி, பண்ணாரியம்மன் பொறியியல் கல்லூரி மற்றும் செங்குந்தர் பொறியியல்  கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் நடந்தது.

× RELATED ராஜிவ்காந்தி பிறந்தநாள் விழா