சீனாபுரம் கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்கவிழா

ஈரோடு, ஜூன் 25: சீனாபுரம் கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2019-20ம் கல்வியாண்டிற்கான முதலாமாண்டு வகுப்புகள் துவக்கவிழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் தாளாளர் முத்துசாமி முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் தலைமை உரையாற்றினார். இயந்திரவியல் துறைத்தலைவர் கோகுல கிருஷ்ணன் வரவேற்பு வழங்கினார். கல்லூரி இயக்குநர் அர்ஜூனன் வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக சிக்கய்ய நாயக்கர் கல்லூரியின் பேராசிரியர் கிருஷ்ணா கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக பெருந்துறை கொங்கு வெள்ளாளர் மெட்ரிகுலேசன் பள்ளியின் தாளாளர் சென்னியப்பன், சீனாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு டிப்ளமோ படிப்பின் முக்கியத்துவம் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து சிறப்புரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>