இலவச லேப்டாப் வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட மாணவர்கள்

ஈரோடு, ஜூன் 25:    ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2017-18, 2018-19ல் பிளஸ் 2 படித்த பெரும்பாலான மாணவர்களுக்கு இதுவரை லேப்டாப் வழங்கப்படவில்லை. அம்மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளியிலும், முதன்மை கல்வி அலுவலகத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் இதுவரை பல முறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள்  தங்களுக்கும் லேப்டாப் வழங்கக்கோரி தங்களது பெற்றோர்களுடன் திரண்டு வந்து மனு அளித்தனர். இது தொடர்பாக மாணவர்கள் தரப்பில் கூறுகையில்,அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கடந்தாண்டுகளில் வழங்க வேண்டிய இலவச லேப்டாப் வழங்கப்படாமல் உள்ளது. இது தொடர்பாக பலமுறை முதன்மை கல்வி அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தான் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்துள்ளோம். லேப்டாப் வழங்கவில்லையெனில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம், என்றனர்.


Tags : collector ,office ,
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் ஹெல்ெமட் திருடர்கள் நடமாட்டம்