புஞ்சைபுளியம்பட்டியில் பெண் பயணியிடம் பணம் திருட்டு

சத்தியமங்கலம், ஜூன் 25:  புஞ்சைபுளியம்பட்டி பஸ் ஸ்டாண்டில் பெண் பயணியிடம் பணம் திருடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.  பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையம் தேவாங்கபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் என்பவரது மனைவி ரூபா(32). இவர் நேற்று முன்தினம் கோவை சென்றுவிட்டு  தொட்டம்பாளையம் செல்வதற்காக புஞ்சைபுளியம்பட்டி  பஸ் ஸ்டாண்டில் பஸ் ஏறினார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர் வைத்திருந்த கைப்பையை  பெண் ஒருவர் திருடி சென்றார். அதில் பணம் ரூ.13 ஆயிரம், ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு, வங்கி பாஸ் புத்தகம், ஹால் டிக்கட் ஆகியவை இருந்தது. பெண் பயணியிடம் கைப்பை திருடிய காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து ரூபா அளித்த புகாரின்படி, வழக்கு பதிவு செய்த, புஞ்சைபுளியம்பட்டி போலீசார் அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.

Tags : Punjipuliyampatti ,
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தலைமையாசிரியர்களுக்கு ஆலோசனை