டிராக்டர் சக்கரத்தில் சிக்கி விவசாயி சாவு

வீரவநல்லூர், ஜூன் 25:  சேரன்மகாதேவி அடுத்த உலகன்குளத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (40), விவசாயி. இவருக்கு முருகசெல்வி என்ற மனைவியும் (35), பால்வில்சன் (4) என்ற மகனும், பன்ஷிகா (2) என்ற மகளும் உள்ளனர்.
நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் சிறுவன் பால்வில்சன் வீட்டின் அருகே நின்றிருந்த டிராக்டர் மீது ஏறி விளையாடி உள்ளான். அப்போது முத்துக்குமார் டிராக்டரின் எதிரே நின்றுள்ளார்.
எதிர்பாராதவிதமாக சிறுவன், டிராக்டரின் சாவியை இயக்கியதால் முன்னோக்கி நகர்ந்த டிராக்டர் முத்துக்குமார் மீது ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்த முத்துக்குமாரை உறவினர்கள் மீட்டு ஆட்டோ மூலம் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி தரப்பட்டு மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாலையில் உயிரிழந்தார்.  இதுகுறித்து சேரன்மகாதேவி பயிற்சி எஸ்ஐ காவுராஜன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

Tags : death ,
× RELATED விவசாயி தற்கொலை