பாபநாசம் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்

வி.கே.புரம், ஜூன் 25:  திரிபிடகத் தமிழ் நிறுவனம், அரசு அருங்காட்சியகம், தம்மவிஜயமகா விகாரை போதபால திபெத்திய தியான பயிற்சி ஆய்வு மையம் மற்றும் பாபநாசம் திருவள்ளுவர் நூலகத்துறை சார்பில் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் தெற்காசிய நாடுகளில் பவுத்தமும், தமிழும் என்ற தலைப்பில் 2 நாள் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது.  கல்லூரி முதல்வர் சுந்தரம் தலைமை வகித்தார். சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்  ஜெயபாலன் வரவேற்றார்.  யாழன் கருத்தரங்கின் நோக்கம் பற்றி விளக்கினார். யாழ்ப்பாண நாகவிகாரை சர்வதேச பவுத்த சங்கத்தை சேர்ந்த மூகவிஜந்துரே சிறிவிழாதோ கலந்து கொண்டு அறிமுக உரையாற்றினார். தேரவாத மஞ்சரி நூலையும் வெளியிட்டார்.இதில் கல்லூரி பிஆர்ஓ கார்த்திகேயன், பேராசிரியர்கள் ராஜேஸ், பாக்கியமுத்து, அன்பன், உடற்கல்வி இயக்குநர் பழனிக்குமார் மற்றும் துறை தலைவர்கள்  வள்ளியம்மாள், அண்ணாதுரை, ரவிசங்கர், விஜயா உட்பட பலர் கலந்து கொண்டனர். பாலச்சந்திரன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி நூலகர் சண்முகானந்தபாரதி செய்திருந்தார்.

Tags : Papanasam College ,
× RELATED அனந்தநாடார் குடி தூய ஜெரோம் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்