நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை கட்டிட கழிவுகளை ெதருக்களில் கொட்டினால் அபராதம்

திருவண்ணாமலை, ஜூன் 25: திருவண்ணாமலையில் கட்டிட மற்றும் இடிபாடு கழிவுகளை தெருக்களில் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) சுரேந்திரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘திருவண்ணாமலை நகராட்சி 2016ம் ஆண்டு கட்டிட மற்றும் இடிபாடுக்கழிவுகள் திடக்கழிவு மேலாண்மை விதி பிரிவு 156ன் படி இடிபாடுகளை கட்டிட உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததார்கள் சாலைகளிேலா அல்லது தெருக்களிலோ கொட்க்கூடாது.

அவ்வாறு ெகாட்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும். அவைகளை சம்பந்தப்பட்டவர்கள் தங்களது சொந்த பொறுப்பில் அகற்றிக்கொள்ள வேண்டும். அல்லது உரிய கட்டணம் செலுத்தினால் நகராட்சி தனது வாகனம் மூலம் அவைகளை அப்புறப்படுத்தும். மேற்கண்ட கட்டிட மற்றும் இடிபாட்டு கழிவுகள் கொட்ட மணலூர்பேட்டை சாலையில் நகராட்சி காலியிடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே கட்டிட உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்தாரர்கள் மற்றும் பொதுமக்கள் மேற்கண்ட இடத்தில் கட்டிடம் மற்றும் இடிபாடு கழிவுகளை கொட்டுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இதனை, தவறும் பட்சத்தில் உரிய விதிகளின்படி அபராத தொகை வசூலிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்

Tags :
× RELATED குமாரபாளையம் நகராட்சியில் கட்டிட கழிவுகளை சாலையோரம் கொட்ட தடை