×

அண்ணாநகர் பகுதியில் அதிநவீன கேமராக்கள்: கமிஷனர் தொடங்கி வைத்தார்

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகரில் மேற்கு டெப்பொ, திருமங்கலம் சந்திப்பு, காவல் நிலையம், ரவுண்டானா, சாந்தி காலனி சந்திப்பு உள்ளிட்ட 5 இடங்களில் போக்குவரத்து விதிகளை மீறி செல்லும் வாகனங்களை படம் பிடிக்கும் அதிநவீன உயர் தொழிட்நுட்ப கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா அறைகளை பெருநகர சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று மாலை தொடங்கி வைத்தார். இதில், போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களின் நம்பர் பிளேட்களை படம் பிடிக்க 40 கேமராக்கள், விதிமீறலுக்கான சான்று அளிக்க 18 கேமராக்கள், விதி மீறுவோரின் மீது நடவடிக்கைகள் எடுக்க 5 கேமராக்கள் ஆகியவை பொறுத்தப்பட்டன.

இதன் மூலம் விதிமுறைகளை மீறி செல்லும் வாகனங்களின் நம்பர் பிளேட்களை படம் பிடித்து சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கமிஷனர் கூறுகையில், தமிழகத்திலேயே முதல்முறையாக போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களின் நம்பர் பிளேட்கள் படம் பிடிக்கப்பட்டு, வாகனத்தின் உரிமையாளருக்கு அபராத தொகைக்கான ரசீது அனுப்பும் வசதி சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது போக்குவரத்து வாகன சட்டப்பிரிவின் படி நடவடிக்கை எடுக்கப்படும். இது விரைவில் மற்ற இடங்களிலும் விரிவுப்படுத்தப்படும் என்றார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண், போக்குவரத்து கமிஷனர் சமயமூர்த்தி மற்றும் போக்குவரத்து உதவி கமிஷனர் சுரேந்திரநாத் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Anna Nagar ,The Commissioner ,
× RELATED மயக்க மருந்து கலந்த குளிர்பானம்...