நள்ளிரவில் மாடி விட்டு மாடி தாவி வீடுகளில் திருட முயன்ற சிறுவன் பிடிபட்டான்

சென்னை: தேனாம்பேட்டை ஜெகன்நாதன் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார்(20). இவர், நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக வீட்டை திறந்து வைத்து தூங்கி உள்ளார். நள்ளிரவில் வாலிபர் ஒருவர் மாடி வழியாக சதீஷ்குமார் வீட்டிற்குள் புகுந்துள்ளார். சத்தம் கேட்டு வீட்டில் தூங்கி கொண்டு இருந்தவர்கள் எழுந்து லைட் போட்ட போது, அந்த வாலிபர் தப்பி வெளியே ஓடினார். அனைவரும் திருடன் திருடன் என கத்தினர். அப்போது அந்த வாலிபர் அருகில் உள்ள சந்திரசேகர் என்பவரின் மாடி வீட்டிற்குள் நுழைந்தார். உடனே சந்திரசேகர் அந்த வாலிபரை மடக்கி பிடித்தார். போலீசார் விசாரணையில் தேனாம்பேட்டை கிரியப்பா தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன் என தெரியவந்தது. அவனிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : upstairs jump house ,
× RELATED கண்மாயில் மூழ்கி சிறுவன் சாவு