உணவு பாதுகாப்பு தின விழா

விளாத்திகுளம்,ஜூன் 25:  விளாத்திகுளம் கவியரசர் அண்ணாமலை ரெட்டியாா் மகளிர் பள்ளியில் உணவு பாதுகாப்பு தின நிறைவு விழா நடந்தது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், சத்துணவு அமைப்பாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கருணாகரன் மாணவிகளுக்கு எளிய முறையில் கலப்பட உணவுகளை கண்டறியும் முறை பற்றி விரிவாக எடுத்துரைத்தார். அதேபோல் அங்கன்வாடி பணியாளர்கள், மாணவிகளுக்கு சத்தான உணவுகள் சிறுதானியங்களை பற்றி விரிவாக விளக்கத்துடன் எடுத்துரைத்தனர்.

மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு உணவுப்பொருட்கள் பற்றிய தங்களது சந்தேகங்களை கேட்டு அறிந்தனர். மேலும் உணவு பாதுகாப்பு மற்றும் உணவுப்பொருள்கள் பற்றி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரைப்போட்டி ஓவியப் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவில் சிறு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவை கண்காட்சிக்கு  வைக்கப்பட்டிருந்தன. இதனை மாணவிகள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.
இவ்விழாவில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிவபாலன்,சந்திசேகரன்,முனியராஜ்,மகாராஜன்,ராஜா,ராஜாமுத்து, முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED சினிமா தியேட்டர்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள்ஆய்வு