கண்ணாடி பாட்டில்கள் மீது அமர்ந்து யோகா விழிப்புணர்வு


கோவில்பட்டி, ஜூன் 25: கோவில்பட்டியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி இளம் மாணவர்கள் கண்ணாடி பாட்டில்கள் மற்றும் கண்ணாடி டம்ளர்கள் மீது அமர்ந்து 20 நிமிடங்கள் வரை யோகாசன சாதனை செய்தனர்.
கோவில்பட்டியில் சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் சார்பில் சர்வதேச யோகாசன தினத்தை முன்னிட்டு யோகாசன சாதனை நிகழ்ச்சி நடந்தது. டிரஸ்ட் பொருளாளர் யுவராஜன் தலைமை வகித்தார். டிரஸ்ட் செயலாளர் தங்கமாரியப்பன் வரவேற்றார். டிரஸ்ட் நிறுவன தலைவர் முருகன், துணை தலைவர் தேவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  1ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் ஜெய்கிரிஷ், ஹரிஸ்குமார், யூகேஜி பயிலும் மாணவி வர்னிகா ஆகியோர் கண்ணாடி பாட்டில்கள் மற்றும் கண்ணாடி டம்ளர்கள்  மீது அமர்ந்து 20 நிமிடங்கள் வரை யோகாசன சாதனை செய்தனர். இதையடுத்து யோகா சாதனை செய்த மாணவர்களை பாராட்டி இனாம்மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் மகேஷ்குமார் பரிசு வழங்கினார். டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் மகேஷ்வரன் நன்றி கூறினார். நிறுவன தலைவர் முருகன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Tags :
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில்...