×

பல்வேறு நன்மைகள் கிடைக்கும்

முன்னோடி தேனீ வளர்பாளரும், தேனீ வளர்ப்பு பயிற்சியாளருமான கொட்டூர் பி. ஹென்றி கூறியதாவது: குமரி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தேனீ ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்து வருகிறோம். இது தொடர்பாக கோவை வேளாண் பல்கலைக்கழகத்திற்கு நான் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், தேன் தொழில் சார்ந்த மத்திய தேனீ வாரியத்திற்கு ₹12.92 கோடி மதிப்பிலான திட்டப் பரிந்துரைகளை வேளாண் பல்கலைக்கழகம் அனுப்பியுள்ளதுடன், அதன் விபரங்களையும் எனக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில் குமரி மாவட்டம் பேச்சிப்பாறையில், ₹1.50 கோடி மதிப்பீட்டில் தேனீ மகத்துவ மையம் அமையவிருக்கும் செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. இதன் மூலம் தேனீ வளர்ப்போர் பல்வேறு நன்மைகளை அடைய முடிவதுடன், தேனீ வளர்ப்பில் ஏராளமானோர் மேலும் ஈடுபட்ட வாய்ப்பும் ஏற்படும் என்றார்.


Tags :
× RELATED ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி