பென்சனர்கள் நலஉரிமைச் சங்க செயற்குழு கூட்டம்

நாகர்கோவில், ஜூன் 25:  தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் நலஉரிமைச் சங்கம் குமரி மாவட்ட மைய செயற்குழு கூட்டம் துணைத்தலைவர் முத்துக்கருப்பன் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் பிறைசூடும் பெருமாள்பிள்ளை வரவேற்றார்.  கூட்டத்தில் தமிழ்நாடு ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தமிழ்நாடு அரசு அமல்படுத்தியுள்ளது. அதற்காக ஓய்வூதியர்களிடமிருந்து A350 மாதந்தோறும் பிரிமியத்தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளில் அங்கீகரிக்கப்பட்ட நோய்களுக்கு மட்டுமே சிகிச்சைக்கு அனுமதிக்கப் படுவதால், ஓய்வூதியர்கள் முழுப்பயனடைய முடியவில்லை. எனவே அனைத்து ஓய்வூதியர்களுக்கும் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பயன்தரத்தக்க விதத்தில் அரசு ஆணை வழங்கிட தமிழக அரசைக் கேட்டுகொள்வது. நாகர்கோவில் நகர பகுதியில் குண்டும் குழியுமான சாலைகளை சீர் செய்ய வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

× RELATED வேளாண் விற்பனை குழு சோதனையில் சந்தை...