×

ராகுல் காந்தி பிறந்தநாள் விழா

ஆத்தூர், ஜூன் 21:  சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், ஆத்தூரில் ராகுல் காந்தியின் பிறந்த நாள் விழா மாவட்ட தலைவர் அர்த்தனாரி தலைமையில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பெத்தநாயக்கன்பாளையம் வட்டார தலைவர் பழனிசாமி, முகில் அரசன், அம்பாயிரம், சதீஷ், அருளானந்தம், மனோஜ்குமார், சக்தி, ஜெயமணி, ராஜ், பெருமாள், ஸ்ரீபதி, பெரியண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேட்டூர்: கோனூர், மேட்டூரில் ராகுல்காந்தியின் 49வது பிறந்த நாள் விழா கொண்டாடடப்பட்டது. சென்றாய பொருமாள் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், வட்டார காங்கிரஸ் தலைவர் அய்யண்ணன் தலைமை வகித்தார். மணி, ரத்தினவேல், குணசேகரன், ராஜன், மணி, சேகர் கவுண்டப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேட்டூரில் நடைபெற்ற விழாவிற்கு நகர் தலைவர் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார். பாலசுப்ரமணியம், சிவஞானம், அய்யாவு, சுப்ரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இடைப்பாடி: இடைப்பாடி பேருந்து நிலையத்தில் நடந்த விழாவுக்கு, நகர தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார். அருணாச்சலம், பாண்டு, நிர்வாகிகள் அண்ணாமலை, ரவி, வீரப்பன், தேன்மொழி, ஆறுமுகம், குருநாதன், நாராயணன், குப்புசாமி, முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Birthday ,Rahul Gandhi ,
× RELATED பிசிசிஐ தலைவர் கங்குலி 48வது...