விஷம் குடித்த மாணவி பள்ளியில் மயங்கி விழுந்தார்

சேலம், ஜூன் 21:  சேலம் அருகேயுள்ள ஆண்டிப்பட்டி பனங்காட்டை சேர்ந்த 14 வயதான சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை பள்ளியில் வாந்தி எடுத்த நிலையில் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசாரின் விசாரணையில், அக்காவுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டில் இருந்த சாணிபவுடரை குடித்து விட்டு பள்ளிக்கு வந்தது தெரியவந்தது. இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : student ,school ,
× RELATED பள்ளியில் விஷம் குடித்த மாணவி சாவு