×

எஸ்சி, எஸ்டி பெண்கள் அரசின் இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல், ஜூன் 21:  தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின பெண்கள், அரசு சார்பில் வழங்கப்படும் இருசக்கர வாகனம் பெற, வரும் 4ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கலெக்டர் ஆசியாமரியம்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ், பணி புரிந்து வரும் மகளிருக்கு, அதிகபட்சம் ₹25 ஆயிரம் வரை மானியம் மற்றும் கடன் தொகையில் இருசக்கர மோட்டார் வாகனம் வழங்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெண்களிடமிருந்து, கடந்த ஜனவரி 31ம் தேதி விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தற்போது, வேலைக்கு செல்லும் பெண்களில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஏழை மகளிரை குடும்பத் தலைவராக கொண்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மானிய விலை இருசக்கர வாகனம் பெறுவதற்கு விண்ணப்பிக்க, கால கெடுவை ஜூலை மாதம் 4ம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளது.

எனவே, தகுதியான தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், ஏழை மகளிரை குடும்பத் தலைவராக கொண்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், இந்த  வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் நேரடியாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ தங்களின் விண்ணப்பங்களை அளிக்கலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : SC ,SD Women Invite ,Government ,
× RELATED தனியார், அரசு உதவி பெறும் கல்வி...