நாளை நடக்கிறது மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

திருச்செங்கோடு, ஜூன் 21: நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், திருச்செங்கோடு சி.எச்.பி. காலனியில் உள்ள மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், நாளை(22ம் தேதி) மாலை 4 மணிக்கு  நடக்கிறது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் நடனசபாபதி தலைமை வகிக்கிறார்.

இதில் தண்ணீர் பிரச்னையை தீர்க்காத அதிமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. எனவே, கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் மற்றும் மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

× RELATED தமாகா செயற்குழு கூட்டம்