×

சென்னை ரிப்பன் மாளிகையிள் தூய்மைப் பணியாளர்களுக்கு பேட்டரி வாகனங்களை வழங்கும் நிகழ்ச்சி: முதல்வர் பங்கேற்பு

சென்னை: சென்னை ரிப்பன் மாளிகையினுள் நுழையும் போது தனது நினைவு 1996 களுக்கு சென்றதாக தூய்மைப் பணியாளர்களுக்கு பேட்டரி வாகனங்களை வழங்கும் நிகழ்ச்சியின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சி உள்ளாட்சி தேர்தலில் தன்னை மேயராக தேர்தெடுத்து பணியாற்ற சென்னை மாநகராட்சி மக்கள் உத்தரவிட்டனர்.  அந்த காலத்தில் நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களுக்கு செல்வது மற்றும் சுற்றுப்பயணம் செல்வது போன்றவைகளே மேயருடைய பணியாக இருந்தது. ஆனால் அதனை மாற்றி மக்கள் பணியாற்றுவது தான் மேயரை வேலை என செயல்பட்டேன் என முதல்வர் தெரிவித்தார்.  ரிப்பன் மாளிகை சாலை வழியா செல்லும் போதெல்லாம் தான் அதனை பார்ப்பதாக முதல்வர் கூறினார். 1996-ல் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபோது ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என கழக உறுப்பினர்கள் கூறினார். ஆனால் தலைவர் அதனை செய்யவில்லை. நானும் தன்னை விரும்பவில்லை. கழக உறுப்பினர் அதனை கட்டாயப்படுத்தியபோதும் தலைவர் முடியாது என மறுத்துவிட்டார். ஆனால் அதற்க்கு பிறகு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவிக்கு போட்டியிட்டு மக்களுடைய வாக்குகளை வாங்கி, மக்கள் வாக்குகளை பெற்று மேயராக கூடிய முதல் மேயராக நான் பொறுப்பேற்றேன் என முதல்வர் கூறினார். சென்னை ரிப்பன் மளிகை ஒரு வரலாற்று சிறப்புமிக்க கட்டிடம் என ஸ்டாலின் கூறினார். கே.என்.நேரு மிக  விரைவாக செயல்படுவார். அதனால் தான் நான் இருந்த நகராட்சி பொறுப்பை அவரிடம் கொடுத்தோம் என முதல்வர் கூறினார். 1,384 வாகனங்களை தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும், அதில் 300 வாகனங்களை தொடங்கி வைக்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ள்ளது. அதேபோல் 195 வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணையும் அந்த விழாவில் வழங்கப்பட்டது. தற்போது சிங்காரச்சென்னை 2.o என்ற வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக  முதல்வர் தெரிவித்தார். …

The post சென்னை ரிப்பன் மாளிகையிள் தூய்மைப் பணியாளர்களுக்கு பேட்டரி வாகனங்களை வழங்கும் நிகழ்ச்சி: முதல்வர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Ribbon House ,Chennai ,Chief Minister ,Chennai Ribbon House ,
× RELATED போக்குவரத்து சிக்னல்களில்...