×

கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க முகாம்; 6 மாதம் நடக்கிறது

நாமக்கல், ஜூன் 21: நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கான குடற்புழு நீக்கம் முகாம், ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலும் நடக்கிறது. இதுகுறித்து கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கால்நடை மருத்துவ வசதி கிடைக்கப்பெறாத கிராமங்களில், கால்நடைகளின் நலம் பாதுகாக்கும் பொருட்டு கால்நடை பாதுகாப்புத்திட்ட முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பாண்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஒன்றியங்களிலும் தலா 14 முகாம்கள் வீதம் 219 முகாம்கள் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு ஜூலை மாதம் 18 முகாம்களும், ஆகஸ்ட் மாதம் 24 முகாம்களும், செப்டம்பர் 54 முகாம்களும், அக்டோபர் மாதம் 62 முகாம்களும், நவம்பர் 40 முகாம்களும், டிசம்பர் மாதம் 21 முகாம்களும் நடைபெறவுள்ளது. இம்முகாம்களில் கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு, மலடு மற்றும் ஆண்மை நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல் ஆகியவை இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன.மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள கிராமங்களில் இந்த முகாம்கள் நடத்தப்படுகிறது. எனவே, கால்நடை வளர்ப்போர் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : Herd camp ,
× RELATED காட்பாடி அருகே யானைகள் கூட்டம் ஏரியில் முகாம்