×

காது சிகிச்சைக்கு சேலத்தில் சிறப்பு முகாம்

சேலம், ஜூன் 21: இயற்கையான முறையில் காது கருவி இல்லாமலேயே காது கேட்கும் தன்மையை அதிகப்படுத்துவதற்கான சிறப்பு முகாம், சேலத்தில் நடக்கிறது என்று டாக்டர்   எஸ்.கிரிதரன் தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில், ‘‘கோவையில் உள்ள கிரி ஆயுர்வேதிக் ஹாஸ்பிடல் சார்பில், சேலத்தில் சிறப்பு காது சிகிச்சை முகாம், இன்றும் (ஜூன் 21), நாளையும் நடக்கிறது.

காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடக்கும் இம்முகாமில் பங்கேற்க, ‘99654 43441’ என்ற எண்ணில் பேசி, பதிவு மற்றும் கூடுதல் விபரங்கள் பெறலாம். தெளிவாக காது கேட்காதவர்கள், காதில் இரைச்சல் இருப்போர், காதில் சீழ் வடிதல், விபத்துக்கு பின் காது கேட்காமல் போவது, காது கருவி பொருத்தியும் கேட்காமல் இருப்பது என பாதிப்புடையவர்கள் இம்முகாமில் பங்கேற்று, தகுந்த சிகிச்சை பெறலாம்,’’ என்றார். 

Tags : Camp ,Deaf ,Salem ,
× RELATED காது கேளாதோர் கிரிக்கெட் மகளிர் பிரிவில் ம.பி. சாம்பியன்