×

கிரீன் விஸ்டம் மெட்ரிக்குலேசன் பள்ளி தொடக்க விழா

அருப்புக்கோட்டை, ஜூன் 21: அருப்புக்கோட்டையில்  கிரீன் விஸ்டம் மெட்ரிக்குலேசன் பள்ளியில்  பள்ளி தொடக்கவிழா மற்றும்  முதல் தளத் திறப்பு விழா நடந்தது.தமிழ்நாடு இஸ்லாமிக் ஸ்கூல் வெல்பர்  அசோசியேசன் செயலாளர் முகமது காசி தேசிய கொடியை ஏற்றினார்.  பள்ளியின் முதல்  தளத்தை தொழிலதிபர் டி.ஆர்.வரதராஜன் திறந்து வைத்தார்.  பள்ளி தாளாளர்  காஜா மைதீன் தலைமை வகித்தார்.  சம்சுதீன் வரவேற்றார்.  காஜாமைதீன் பந்தே  நவாஸ், வீனஸ் சாகுல்ஹமீது, மொய்தீன் அப்துல்காதர், டாக்டர் புரோஸ்கான்,  ஆனந்தம் ஆகியோர் பள்ளியின் பல்வேறு அறைகளை திறந்து வைத்தனர்.  பேராசிரியர்  ரத்தினசாமி இக்ரா பள்ளி தாளாளர் முகமதுயூசுப் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடையை  அம்சாக்கனி சிக்கந்தர்  வழங்கினார்.  பொருளாளர் சிக்கந்தர் நன்றி கூறினார்.



Tags : Green Wisdom Matriculation School Opening Ceremony ,
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?