×

ராகுல்காந்தி பிறந்தநாள் காங்கிரசார் இனிப்பு வழங்கினர்

வத்திராயிருப்பு, ஜூன் 21: ராகுல்காந்தி பிறந்த நாளை முன்னிட்டு வத்திராயிருப்பு முத்தாலம்மன் திடல் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.காங்கிரஸ் நகரத் தலைவர் ஆட்டோசெல்வம் தலைமை வகித்தார். தகவல் அறியும் உரிமைச் சட்டம் மாநில துணைத் தலைவா் சுந்தரம் முன்னிலை வகித்தார். மாவட்ட வர்த்தக பிரிவுத் தலைவர் சத்தியமூர்த்தி காங்கிரஸ் கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.வட்டார பொருளாளா் மூக்கையா முன்னாள் வட்டாரத் தலைவர் அழகர்சாமி, மாவட்ட பொதுச் செயலாளர் நடராஜன், அனிபாஐஸ், முத்தையா, பரசுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.Tags : birthday congressman ,Rahul Gandhi ,
× RELATED சொல்லிட்டாங்க...