அமமுக வினர் திமுகவில் இணைந்தனர்

சாத்தூர், ஜூன் 21:சாத்தூரில் யாதவர் நந்தவனத்தில் சாத்தூர் திமுக நகர செயலாளர் குருசாமி தலைமையில் அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சாத்தூர் ராமசந்திரன் முன்னிலையில் நேற்று அமமுக கட்சியை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் திமுகவில் இணைந்தனர்.அப்போது கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் பேசுகையில், ‘சரியான நேரத்தில் நல்ல முடிவு எடுத்து சரியான இடத்திற்கு வந்திருக்கிறீர்கள். நான் கூட எம்.ஜி.ஆர் காலத்தில் அதிமுகவில் இருந்தவன்தான். ஜெயலலிதா காலத்தில் அதில் இருந்து விலகி நன்கு யோசித்து திமுகவில் இணைந்தேன். திமுக என்பது ஒரு அசைக்க முடியாத சக்தி. கலைஞர் இருக்கும்போதும் சரி ஸ்டாலின் இப்போது தலைவராக இருக்கும் போதும் சரி மக்களுக்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி யோசித்து கொண்டே இருப்பார்கள்’ என்றார்.

Tags : Amukha Viner ,DMK ,
× RELATED கூட்டணி தொடர்பாக திமுக- காங்கிரஸ்...