கல்லூரி மாணவி மாயம்

வருசநாடு, ஜூன் 21: வருசநாடு அருகே மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.  வருசநாடு அருகே பவளநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமுதாய். இவரது மகள் பாக்கியம் (21). இவர் தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை. இதுகுறித்து மாணவியின் தாய் ராமுத்தாய் கொடுத்த புகாரின் பேரில் வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.


Tags :
× RELATED கல்லூரி மாணவி மாயமான வழக்கில் பெண்கள் உட்பட 6 பேர் கைது