திருப்புவனத்தில் திமுக பொதுக்கூட்டம்

சிவகங்கை, ஜூன் 21: திருப்புவனத்தில் திமுக சார்பில் தலைவர் கருணாநிதியின் 96வது பிறந்த நாள் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடந்தது.ஒன்றிய இலக்கிய அணித் தலைவர் அக்கினிராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் வசந்தி சேங்கைமாறன், கடம்பசாமி, பேரூர் செயலாளர் நாகூர்கனி முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச்செயலாளர் சேங்கைமாறன் வரவேற்றார்.மாநில இலக்கிய அணி துணை செயலாளர் ஈரோடு இறைவன், சிவகங்கை மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் எம்எல்ஏ, மாநில இலக்கிய அணித் தலைவர் தென்னவன், முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் இலக்கியதாசன் சிறப்புரை ஆற்றினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், துணை அமைப்பாளர் ரவி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார், மாவட்ட பிரதிநிதிகள் ராமலிங்கம், பிச்சைமணி, ஈஸ்வரன், பிரகாஷ், ஒன்றிய கழக நிர்வாகிகள் போஸ், சுப்பிரமணியன், சக்திமுருகன், ரவி, தினகரன், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் அண்ணாமலை, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தேவதாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொற்கோ நன்றி கூறினார்.

Tags : DMK ,General Meeting ,
× RELATED காரைக்குடியில் பட்டா கத்தியுடன் ரவுடிகள் ரகளை