×

காரைக்குடியில் கனரா வங்கி கிளை துவக்கவிழா

காரைக்குடி, ஜூன் 21: காரைக்குடியில் கனரா வங்கியின் விரிவுபடுத்தப்பட்ட கிளை துவக்க விழா நடந்தது.காரைக்குடி செக்காலைரோட்டில் கனரா வங்கி விரிவுபடுத்தப்பட்ட கிளை துவக்கவிழா நடந்தது. வங்கி முதன்மை மேலாளர் அன்வர்சதக் வரவேற்றார். மதுரை வட்ட பொதுமேலாளர் பரமசிவம் தலைமை வகித்தார்.துணை பொதுமேலாளர் மாதவராஜ் முன்னிலை வகித்தார். சங்கராபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் மாங்குடி குத்துவிளக்கு ஏற்றினார். அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் என்.ராஜேந்திரன் புதிய கிளையை திறந்து வைத்து பேசுகையில், வங்கி சேவையை அனைத்து மக்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப இந்த வங்கியில் அனைத்து தொழில்நுட்ப வளர்ச்சிகளும் செய்யப்பட்டுள்ளது. பணியாளர்களும் வாடிக்கையாளர்களிடம் அன்புடன் பழகி சிறந்த சேவையாற்றுகின்றனர்.

இவ்வங்கி சார்பில் புதிதாக தியா என்ற மொபைல் ஆப் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தாங்களாகவே வங்கி கணக்கு துவங்கலாம். வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளனர். தவிர மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் கல்வி ஊக்கத்தொகை வழங்கி வருவது பாராட்டுக்குஉரியது என்றார். நிகழ்ச்சியில் அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா, கிட் அண்டு கிம் கல்வி குழும தலைவர் அய்யப்பன், தொழிலதிபர்கள் எஸ்எல்என்.வள்ளியப்பன், பிஆர்.சொக்கலிங்கம், முன்னாள் எம்எல்ஏ சுந்தரம், வங்கி அதிகாரி ராமநாதன், கட்டிட உரிமையாளர் பெத்தபெருமாள், செட்டிநாடு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பிரேம்ஆனந்த் நன்றி கூறினார்.
Tags : Canara Bank Branch ,Karaikudi ,
× RELATED காரைக்குடியில்...