×

வயதானவர்களும் செயற்கை முறையில் குழந்தை பெறலாம் டாக்டர் ரமேஷ் தகவல்

காரைக்குடி, ஜூன் 21: காரைக்குடியில் கவிதா கருத்தரிப்பு மையம் சார்பில் செயற்கை கருத்தரிப்பு முறையில் தென்தமிழகத்திலேயே அதிகமாக கடந்த 10 ஆண்டுகளில் 1,000 குழந்தைகள் பிரசவித்ததற்கான விழா நடந்தது. கவிதா கருத்தரிப்பு மைய நிர்வாக இயக்குநர் டாக்டர் கவிதா வரவேற்றார். ஆரஞ்ச் ட்ரீ டிரஸ்ட் சார்பில் 50 மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை ஐ.ஜி வரதராஜூ வழங்கினார். மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரமேஷ் பேசுகையில், கவிதா கருத்தரிப்பு மையத்தில் கடந்த 10 ஆண்டுகளில் செயற்கை கருத்தரிப்பு முறையில் இதுவரை தென் தமிழகத்தில் முதல் முறையாக 1,000 குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையில் குழந்தை பிறப்பு தன்மை 60 சதவீதமாக உள்ளது. 10 மாதம் எங்கள் கண்காணிப்பிலேயே செயற்கை கருத்தரிப்பு தம்பதிகளை பராமரிக்கிறோம். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் 59 வயது பெண்ணுக்கு செயற்கை கருத்தரிப்பு முறையில் இரட்டை குழந்தை பிரசவித்தோம். குழந்தை இல்லை என இனி யாரும் கவலைப்பட தேவையில்லை. திருமணமாகி ஒரு வருடத்தில் குழந்தை இல்லை என்றால் டாக்டரிடம் ஆலோசனை பெறவேண்டும். வளர்ந்த நகரங்களில் உள்ள அனைத்து நவீன வசதிகளும் இங்கு உள்ளது. வயதான தம்பதிகளும் குழந்தை இல்லை என இனி கவலைப்பட வேண்டாம். செயற்கை கருத்தரிப்பு முறையில் நல்ல ஆரோக்கியமான குழந்தை பெறலாம் என்றார்.

Tags : Ramesh ,
× RELATED சொல்லிட்டாங்க…