மின்சாரம் தாக்கி எலெக்ட்ரீசியன் பலி

பரமக்குடி, ஜூன் 21: பரமக்குடி அருகே உள்ள விளவனூர் கிராமத்தை சேர்ந்தவர் முனியராஜ். கட்டிடம் மற்றும் கடைகளுக்கு வயரிங் செய்து கொடுக்கும் பணி செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை தனது வீட்டின் அருகே உள்ள வீட்டில் மின்சாரம் இல்லாமல் இருந்துள்ளது. இதை சரிசெய்யும் பணியில் முனியராஜ் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.ஆபத்தான நிலையில் இருந்த முனியராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்தநிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இதுகுறித்து சத்திரக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Electrician ,
× RELATED மது போதையில் தூங்கியபோது விபரீதம்...