×

காரைக்குடியில் இலவச உடல்பருமன் விழிப்புணர்வு முகாம்

காரைக்குடி, ஜூன் 21: உடல் பருமனால் அவதிப்படுபவர்களுக்கு ஓர் இனிய செய்தி.
21ம் நூற்றாண்டில் உடல் பருமன் நோய் என்பது உலகம் முழுவதும் பெரும்பான்மையாக உள்ளது. மேலும் உடல்பருமன் நோய், வாழ்க்கைமுறை நோய்களான சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, மூட்டுவலி, இதயநோய்கள், குறட்டை, குழந்தையின்மை, சிலவகை புற்றுநோய்களுக்கும் வழிகாட்டியாக விளங்குகிறது.தற்போது குணப்படுத்த முடியாத உடல்பருமன் மற்றும் சர்க்கரை நோய்க்கு உடல்பருமன் அறுவைசிகிச்சை ஒரு சிறந்த சிகிச்சை முறையாக இருக்கிறது. இப்பொழுது இந்த அறுவை சிகிச்சையானது தமிழக அரசின் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் உயிர்காக்கும் அறுவை சிகிச்சையாக அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. நம் மக்களுக்காக உலகத்தர சிகிச்சை வழங்க புகழ்பெற்ற கோவை ஜெம் மருத்துவமனை இப்பொழுது நம் தலைநகர் சென்னையிலும் தொடங்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற கோவை மற்றும் சென்னை ஜெம் மருத்துவமனை நம் காரைக்குடியில் கோல்டன் சிங்கார் மஹால், 100 அடி ரோடு, பெரியார் சிலை அருகில் 23.6.2019 ஞாயிறு காலை 9 மணிக்கு சிறப்பு உடல்பருமன் அறுவை சிகிச்சைமுகாம் நடத்த உள்ளது. இதில் சிறப்பு உடல் பருமன் அறுவைசிகிச்சை நிபுணர்கள் டாக்டர் பிரவீன்ராஜ் மற்றும் டாக்டர் சரவணக்குமார் தலைமையில் மருத்துவ குழுவினர் ஆலோசனை வழங்குகின்றனர். முகாமில் கலந்துகொண்டு அதிக உடல் எடையால் குறட்டை, மூட்டுவலி, மலட்டுத்தன்மை, கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற ஆபத்தான நோய்களில் இருந்து விடுபட்டு, நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பொன்மொழிக்கு ஏற்ப ஆரோக்கியமான வாழ்க்கையை பெற்றிடுவீர்.



Tags : Obesity Awareness Camp ,Karaikudi ,
× RELATED “சர்வாதிகார நாடுகளை போல பாஜக ஆட்சி உள்ளது” : கார்த்தி சிதம்பரம்