×

ராமேஸ்வரத்தில் ஜமாபந்தி

ராமேஸ்வரம், ஜூன் 21: ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மதியழகன் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. இதில் பட்டா மாறுதல் கோரி மனு கொடுத்த 2 பேருக்கு உடனடியாக பட்டா மாறுதல் செய்து உத்தரவிட்டப்பட்டது. மேலும் பொதுமக்களிடம் இருந்து பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பு அகற்றல், பெயர் மாற்றம் குறித்து மனுக்கள் பெறப்பட்டது. பாம்பன், ராமேஸ்வரம் கிராம ஜமாபந்தி தணிக்கை செய்யப்பட்டது. ராமேஸ்வரம் தாசில்தார் அப்துல்ஜபார், வட்ட வழங்கல் அலுவலர் உமாமகேஸ்வரி, துணை வட்டாட்சியர் நம்புகாயத்ரி, இந்திரஜித், வட்ட ஆய்வாளர் முத்துக்குமார், வருவாய் ஆய்வாளர் வீரபாண்டி, கிராம நிர்வாக அலுவலர்கள் ரொட்ரிக்கோ, சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Rameswaram ,
× RELATED ராமேஸ்வரம் கோயில் உண்டியல் வழக்கு:...