இன்று சிறப்பு திட்ட முகாம்

மதுரை, ஜூன் 21: மதுரை மாவட்ட வருவாய்த்துறை சார்பில், 11 தாலுகா பகுதிகளில் இன்று சிறப்பு திட்ட முகாம் நடைபெறுகிறது. கள்ளிக்குடி தாலுகாவில் சென்னம்பட்டியிலும், மேலூர் தாலுகாவில் மாணிக்கம்பட்டியிலும், உசிலம்பட்டி தாலுகாவில் திடியனிலும், மதுரை கிழக்கு தாலுகாவில் செங்கோட்டையிலும், திருமங்கலம் தாலுகாவில் அம்மாப்பட்டியிலும் நடக்கிறது. இதேபோல், சிறப்பு திட்ட முகாம், மதுரை வடக்கு தாலுகாவில் பரவையிலும், பேரையூர் தாலூகாவில் பேரையூரிலும், மதுரை தெற்கு தாலுகாவில் பனையூரிலும், மதுரை மேற்கு தாலுகாவில், கரடிப்பட்டியிலும், திருப்பரங்குன்றம் தாலுகாவில் மாடக்குளத்திலும் நடைபெறுகிறது.  இந்த முகாமில் தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

Tags : project camp ,
× RELATED மக்கள் தொடர்பு திட்ட முகாம் இன்று நடக்கிறது