×

மூர்த்தி எம்எல்ஏ குற்றச்சாட்டு மேலூர் ஜிஹெச்சில் குரங்குகள் சேட்டை தாங்க முடியல... வனத்துறை பிடிக்க வலியுறுத்தல்

மேலூர், ஜூன் 21: மேலூர் அரசு மருத்துவமனையில் அதிகரித்துள்ள குரங்குகள் தொல்லையால் நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலூர் நகர் மற்றும் கிராமபுறத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தினசரி மேலூர் அரசு மருத்துவமனைக்கு புறநோயாளிகளாக வந்து செல்கின்றனர். இத்துடன் ஆண், பெண் உள்நோயாளிகள் பிரிவு, மகப்பேறு பிரிவு, குழந்தைகள் பிரிவு என ஏராளமானவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் சூழ்நிலையும் உள்ளது. அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் மரங்கள் அடர்ந்து இருக்கும். இதை பயன்படுத்தி இங்கு ஏராளமான குரங்குகள் வந்து தங்க ஆரம்பித்துள்ளது. அழகர்கோவில் இருந்து தப்பி உணவு தேடி வரும் குரங்குகள், உணவுகள் கிடைக்கும் இடங்களில் அப்படியே தங்கி விடுகிறது. அரசு மருத்துவமனையில் ஏராளமான குரங்குகள் நோயாளிகளை பயமுறுத்தி அவர்கள் உணவுகளை பறித்து கொள்கிறது. இத்துடன் மருத்துவமனையில் உணவு தயாரிக்கும் பகுதிக்குள் சென்று உணவு பொருட்களை தூக்கி சென்று விடுகிறது. இத்துடன் வளாகத்தில் உள்ள மின் வயர்களை அறுத்து வீசி விடுகிறது.  ஆரம்பத்தில் ஒரு சில குரங்குகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது இவை பல்கி பெருகி விட்டது. உடனடியாக வனத்துறையினர் இவற்றை பிடித்து மலைப் பகுதியில் கொண்டு போய் விட வேண்டும் என மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.




Tags : Murthy ,MLA ,
× RELATED எம்.பி. கணேசமூர்த்தியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு