குடிநீர் பிரச்னையை கண்டித்து பழங்காநத்தம், ஒத்தக்கடையில் நாளை திமுக ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜூன் 21: தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாத அதிமுக அரசை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதன்படி மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் பழங்காநத்தம் சந்திப்பில் நாளை காலை 10 மணிக்கு பொறுப்புகுழு தலைவர் தளபதி தலைமையில் ஆர்ப்பாடடம் நடக்கிறது. இதில் மாநகர் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள், பகுதி, வட்ட செயலாளர், அனைத்து அணியினர் திரளாக பங்கேற்கும்படி தளபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஒத்தக்கடையில் நாளை காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ. தலைமை வகிக்கிறார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், பகுதி மற்றும் ஊராட்சிகளின் செயலாளர்கள், அனைத்து அணி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்க வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
Tags : DMK ,demonstration ,
× RELATED சிங்கம்புணரி யூனியன் கூட்டத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க தீர்மானம்