கொடைக்கானலில் மீண்டும் விபரீதம் தடை வின்டர் ஆயில் குடித்து பெண் தற்கொலை

கொடைக்கானல், ஜூன் 21: கொடைக்கானல் பகுதியில் உடல் வலி, தலை வலி ஆகியவற்றை குணமாக்கும் என்ற நம்பிக்கையில் பல்வேறு தைலங்கள் விற்கப்படுகின்றன. இதில் உடல் வலிக்கு விற்கப்படும்விண்டர் கிரீன் தைலம் தடை செய்யப்பட்டுள்ளது. காரணம் இதை தற்கொலைக்கு முயல்பவர்கள் குடித்து ஒருவர் கூட உயிர் பிழைக்காததுதான். எனினும் இதை மீறி பல இடங்களில் அவை விற்பனை செய்யப்படுகின்றன. கொடைக்கானல் சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த இளங்கோவன் மனைவி காளீஸ்வரி (20). இவர் கடந்த சில மாதங்களாக காய்ச்சலுக்கு மாத்திரை சாப்பிட்டு வந்ததில் வயிற்று வலி ஏற்பட்டு அவதியடைந்து வந்துள்ளார். கடந்த 18ம் தேதி வயிற்று வலி அதிகமானதால் காளீஸ்வரி வீட்டில் இருந்த வலி நிவாரண வின்டர் கிரீன் தைலத்தை குடித்து மயங்கி உள்ளார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு கொடைக்கானல் ஜிஹெச்சில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி ஜிஹெச்சில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காளீஸ்வரி உயிரிழந்தார். கொடைக்கானல் பகுதியில் தடை செய்யப்பட்ட வின்டர் கிரீன் தைலம் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : suicide ,binge drinking ,
× RELATED தூக்கிட்டு பெண் தற்கொலை