நிலத்தகராறில் அண்ணனை வெட்டி கொன்ற தம்பி கைது வத்தலக்குண்டு அருகே பயங்கரம்

வத்தலக்குண்டு, ஜூன் 21: நிலத்தகராறில் வத்தலக்குண்டு அருகே அண்ணனை வெட்டி கொன்ற தம்பி கைது செய்யப்பட்டார்.வத்தலக்குண்டு அருகே வடிவேல்புரத்தை சேர்ந்தவர் முத்தையா (55). விவசாயி. அதே ஊரில் இவரது தம்பி பெருமாள் வசித்து வருகிறார். முத்தையா, பெருமாள் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 6 பேர். அனைவரும் பூர்வீக சொத்தில் இருந்து 2 ஏக்கர் நிலத்தை பிரித்து கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். இதில் முத்தையாவிற்கும், பெருமாளுக்கும் தகராறு இருந்து வந்தது. இதுதொடர்பாக நேற்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போதுஆத்திரமடைந்த பெருமாள் அரிவாளால் முத்தையாவை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலே முத்தையா உயிரிழந்தார். இதுகுறித்து விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிந்து பெருமாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். கொலையான முத்தையாவிற்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.Tags : Vattalakundu ,
× RELATED ஒரு மாத பரோல் நாளையுடன் முடிகிறது ...