ஒட்டன்சத்திரம் வனத்தில் இறந்து கிடந்த கடமான்

ஒட்டன்சத்திரம், ஜூன் 21: ஒட்டன்சத்திரம்- பாச்சலூர் சாலையில் கடைசிக்காடு வனப்பகுதியில் கடமான் ஒன்று இறந்த நிலையில் நேற்று கிடந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் தாண்டிக்குடி கால்நடை ஆய்வாளர் நந்தகுமாரை வரவழைத்து கடமானின் சடலத்தை பரிசோதனை செய்து மலைப்பகுதியில் புதைத்தனர்.வனத்துறையினர் கூறுகையில், ‘இறந்த கடமானுக்கு வயது 6 மாதம் இருக்கலாம். வறட்சி மற்றும் நோயால் இறந்ததா? அல்லது வாகனம் மோதி இறந்ததா என தெரியவில்லை. அதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.

Tags : forest ,
× RELATED சீட் பிடிப்பதில் தகராறு ஓடும் ரயிலில் ஒருவர் அடித்துக்கொலை