×

விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் 19 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

விழுப்புரம், ஜூன் 21: விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் 19 இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார். அதன்படி விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜன் கண்டமங்கலத்துக்கும், அங்கிருந்த சுரேஷ்பாபு மயிலத்துக்கும், கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு மைக்கேல் இருதயராஜ் விழுப்புரம் மாவட்டம் கிளியனூருக்கும், கடலூர் குற்றப்பிரிவு மரியசோபி மஞ்சுளா விழுப்புரம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கும், கடலூர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பிரேமா விழுப்புரம் சமூக நீதி பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பூங்கோதை விழுப்புரம் மாவட்டம் குற்ற ஆவண பிரிவுக்கும், விருத்தாசலம் கல்பனா விழுப்புரம் சமூக நீதி மனித உரிமைகள் பிரிவுக்கும், நெய்வேலி ரேவதி விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்துக்கும், புவனகிரி ஆறுமுகம் நெய்வேலி நகரத்துக்கும், கடலூர் பாண்டிசெல்வி பண்ருட்டிக்கும், நெய்வேலி ரவீந்திரராஜ் காட்டுமன்னார்கோவிலுக்கும், அங்கிருந்த ஷியாம்சுந்தர் குறிஞ்சிப்பாடிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல், விழுப்புரம் எழிலரசி கடலூர் அனைத்து மகளிர் பிரிவுக்கும், விழுப்புரம் நில அபகரிப்பு பிரிவு தாரகேஸ்வரி கடலூர் குற்றப்பிரிவுக்கும், விழுப்புரம் தேர்தல் பிரிவு இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் புவனகிரிக்கும், கள்ளக்குறிச்சி வனஜா நெய்வேலிக்கும், விழுப்புரம் ஈஸ்வரி கடலூர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கு என 19 இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து விழுப்புரம் டிஜஜி சந்தோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.


Tags : inspectors ,Villupuram ,Cuddalore district ,
× RELATED விழுப்புரம் தலைமை தபால் நிலையத்தில் திடீர் தீ விபத்து