×

வள்ளியூரில் இன்று மந்திரமூர்த்தி மாடசுவாமி கோயில் கொடை விழா

நெல்லை, ஜூன் 21: வள்ளியூர் பழைய பஸ்நிலையம் அருகேயுள்ள மந்திரமூர்த்தி மாடசுவாமி கோயில் கொடை விழா இன்று (21ம் தேதி) விமரிசையாக நடக்கிறது. கொடை விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், காலை 7 மணிக்கு சிவனணைந்தபெருமாள் பொங்கல் வழிபாடு நடக்கிறது. நண்பகல் 12 மணிக்கு  மந்திரமூர்த்தி மாடசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. மாலை 5 மணிக்கு பொங்கல் வழிபாடு, இரவு 9 மணிக்கு வில்லிசை, இரவு 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. இதைத் தொடர்ந்து நாளை (22ம் தேதி) அதிகாலை 2 மணிக்கு படப்பு தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை வள்ளியூர் மந்திரமூர்த்தி கோயில் வகையார் தலைவர் சிவராமகிருஷ்ணன், செயலாளர் நம்பிராஜன், பொருளாளர் குமார் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.




Tags : Mantramoorthy Modaswamy Temple Donation Ceremony ,Valliyur ,
× RELATED அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி வாக்கு சேகரிப்பு..!!