குற்றாலம் செய்யது பள்ளியில் யோகா தினம் கொண்டாட்டம்

தென்காசி, ஜூன் 21:    குற்றாலம் ஐந்தருவி செய்யது ஹில்வியூ பள்ளியில் 5வது சர்வதேச யோகாதினம் கொண்டாடப்பட்டது.   உலகம் முழுவதும் ஜூன் 21ம் தேதி சர்வேதேச யோகா தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு குற்றாலம் ஐந்தருவி செய்யது ஹில்வியூ பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் உடல் மனம் ஆரோக்கியத்தை வலியுறுத்தி யோகா  21 என்ற வடிவத்தில் யோகாமுத்ராசனம், மஹா முத்ராசனம், பத்மதாடாசனம் உள்ளிட்ட  பல்வேறு ஆசனங்கள் மேற்கொண்டு பார்வையாளர்களை அசத்தினர். இதில் பங்கேற்ற மாணவ,  மாணவிகளையும், பயிற்சியளித்த யோகா ஆசிரியர் குருகண்ணனையும் பள்ளித் தலைவர் பத்ஹூர் ரப்பானி, செயலாளர் நயினாமுகமது, நிர்வாக இயக்குநர்  செய்யது நவாஸ், தலைமையாசிரியை நசீம்பானு மற்றும் பெற்றோர்- ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.

Tags : Yoga Day Celebration ,Courtallam ,
× RELATED சேர்ந்தமரம் பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய குழுவினர் ஆய்வு