×

விவசாயிகள் வெகுமதி நிதி திட்டத்தில் சேர விஏஓ ஆபீசில் இன்றும், நாளையும் சிறப்பு முகாம்

தூத்துக்குடி, ஜூன் 21: தூத்துக்குடி கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிஎம்  கிசான் எனப்படும் பிரதம மந்திரியின் விவசாயிகள் வெகுமதி நிதித்  திட்டத்தின் கீழ்  சிறு, குறு நில உடைமை விவசாயிகள் பதிவு செய்யப்பட்டு  வெகுமதி நிதி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தத் திட்டத்தின் பயனை  பெரிய விவசாயிகளுக்கும் கிடைக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.

எனவே,  திட்டத்தின்படி உள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு பெரு விவசாயிகளையும்  கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்படட்டு வருகிறது. மேலும், இந்தத்  திட்டத்தின் கீழ் பயனாளிகளை சேர்க்க இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை  (22ம் தேதி) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து கிராம நிர்வாக  அலுவலகங்களிலும் மனுக்கள் பெற சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் சிறப்பு முகாமில்  தங்களது விவரங்களை அளித்து இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : camp ,VAO Office ,Farmers Rewards Fund Program ,
× RELATED மருத்துவ முகாம்