×

மக்களவை தேர்தலுக்காக மாற்றப்பட்ட எஸ்ஐக்கள் மீண்டும் தூத்துக்குடிக்கு மாற்றம்

தூத்துக்குடி, ஜூன் 21: தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களவை தேர்தலுக்காக மாற்றப்பட்ட எஸ்ஐக்கள், மீண்டும் தூத்துக்குடி மாவட்டத்திற்கே பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மக்களவை தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய  மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த எஸ்ஐக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களைச் சார்ந்த 62 எஸ்ஐக்கள் மீண்டும் தூத்துக்குடி மாவட்டத்திற்கே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதில் எஸ்ஐ பாண்டியன் கல்லிடைக்குறிச்சியில் இருந்து கழுகுமலைக்கும், மூன்றடைப்பு ரமேஷ்குமார் -ஓட்டப்பிடாரம், நெல்லை தாலுகா வைகுண்டம் -நிலமோசடி தடுப்பு பிரிவு, பனவடலிசத்திரம் முருகன் -சமூகநீதித்துறை, வி.கே.புரம் சுரேஷ்குமார் -முறப்பநாடு, மாஞ்சோலை திருமலைமுருகன் -தெர்மல்நகர், முன்னீர்பள்ளம் ஆர்தர் ஜஸ்டின் -கோவில்பட்டி மேற்கு, மானூர் சண்முகசுந்தரம் -ஏரல், தேவர்குளம் பாலகிருஷ்ணன் -குரும்பூர், களக்காடு ராமச்சந்திரன் -விளாத்திகுளம், திருக்குறுங்குடி பழனி -சாயர்புரம், இலத்தூர் அரிக்கண்ணன் -கோவில்பட்டி மேற்கு, சங்கரன்கோவில் செல்வம் -புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.

இதேபோல் பாவூர்சத்திரம் மாணிக்கராஜ் -சூரங்குடி, பத்தமடை கார்த்திகேயன் -நாசரேத், அச்சன்புதூர் சதீஷ் -குலசேகரபட்டினம், தென்காசி மகாராஜா -தட்டப்பாறை, சீதபற்பநல்லூர் முத்துசாமி -காடல்குடி, வி.கே.புதூர் சுந்தரம் -தூத்துக்குடி வடபாகம், சுரண்டை முத்துகணேஷ் -சிப்காட், மூலைக்கரைப்பட்டி  ஊர்க்காவலபெருமாள் -தூத்துக்குடி மத்தியபாகம், முன்னீர்பள்ளம் ரவிக்குமார் -வடபாகம், நாங்குநேரி ஷானராஜன் -தென்பாகம், குற்றாலம் ராஜாமணி -தென்பாகம், தென்காசி தாமரைச்செல்வி -தாளமுத்துநகர், மார்த்தாண்டம் ஹென்சன்பவுல்ராஜ் -தென்பாகம், ஆலங்குளம் மகாராஜன் -திருச்செந்தூர் தாலுகா, வாசுதேவநல்லூர் சந்திரமூர்த்தி -சிப்காட் உள்ளிட்ட 63 பேர் மீண்டும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை எஸ்பி முரளிரம்பா பிறப்பித்துள்ளார்.

Tags : SIUs ,elections ,Tuticorin ,Lok Sabha ,
× RELATED சிங்கப்பூரில் இன்று பொதுத்தேர்தல்