ஓசூர் ஐடிஐயில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு

ஓசூர், ஜூன் 21:  ஓசூர் ஐடிஐயில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஓசூர் அரசினர் ஐடிஐயில், 2019-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 27ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து துணை இயக்குநர் (பொ) சுகுமார்  கூறியிருப்பதாவது: ஓசூர் அரசினர் ஐடிஐயில், மாணவர் சேர்க்கைக்கு காலக்கெடு வருகிற 27ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 14 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.

பெண்களுக்கு குறைந்தபட்ச வயது 14, உச்ச வயது வரம்பு இல்லை. கல்விதகுதி : 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுள்ள பிரிவுகள்: கம்பியாள் (ஒயர்மேன்)  (2 வருடம்), 10ம் வகுப்புதேர்ச்சிப் பெற்றவர்கள்: கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் (கோபா) (1 வருடம்), கணினி வன்பொருள் மற்றும் வலைதள பராமரிப்பு (1 வருடம்), மின் பணியாளர் (2வருடம்), கம்மியர் மின்னணுவியல் (2 வருடம்), பொருத்துநர் (2 வருடம்), அச்சுவார்ப்பவர் (1வருடம்), கம்மியர் கருவிகள் (2 வருடம்), கம்மியர் இயந்திரம் மற்றும் மின்னணுவியல் (2 வருடம்), கம்மியர் மோட்டார் வண்டி  (2 வருடம்), கருவி மற்றும் அச்சு செய்பவர் (2 வருடம்), கடைசலர் (2வருடம்), பற்றவைப்பவர் (1 வருடம்) மற்றும் உற்பத்தி மற்றும் தயாரிப்பு (2 வருடம்)  ஆகிய தொழிற் பிரிவுகளுக்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்டதொழிற்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், வரும் 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.  கலந்தாய்வுக்கு வரும் போது விண்ணப்பித்த விண்ணப்பம், சலான் மற்றும் அசல் சான்றிதழ்களை கொண்டுவர வேண்டும். பயிற்சியின் போது, மாதந்தோறும் ₹500 உதவித் தொகை வழங்கப்படும். இதை தவிர விலையில்லா பாடபுத்தகம், வரைபட கருவிகள், லேப்டாப், சீருடை, ைசக்கிள், பஸ் பாஸ், ஷூ முதலியவை இலவசமாக வழங்கப்படும். ஆண் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதி உண்டு.  தகுதியுள்ள அனைத்து மாணவ,மாணவிகளும், ஓசூர் அரசு ஐடிஐயில் சேர்ந்து பயன் பெறலாம். இவ்வாறு ஐடிஐ துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Tags : Hosur ITI ,
× RELATED ஓசூரில் பரபரப்பு ரவுடி மனைவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி