×

பர்கூர் ஒன்றிய சத்துணவு பணியாளர் பேரவை நிர்வாகிகள் தேர்வு

கிருஷ்ணகிரி, ஜூன் 21:  பர்கூரில், ஒன்றிய தமிழ்நாடு ஒருங்கிணைந்த சத்துணவு பணியாளர் ஓய்வுபெற்றோர் பேரவையின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. முன்னாள் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். சங்க நிறுவனர் தங்கவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பர்கூர் ஒன்றியத்தின் புதிய தலைவராக ராமச்சந்திரன், செயலாளராக ராமு, பொருளாளராக பெருமாள், துணைத் தலைவர்களாக நாகராஜன், அங்கமுத்து, துணை செயலாளர்களாக கேசவன், மாரியப்பன், செயற்குழு உறுப்பினர்களாக ஆஞ்சலா, பாஸ்காமேரி, இந்திராணி, ருத்தரமணி, ராமசாமி, உஷாராணி, சரோஜா, சுசீலா, மீனாட்சி, வடிவேல், சரோஜா, அஞ்சலா, மாதராணி, பாஞ்சாலி, பொன்பழனி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Tags : administrators ,Burgur Union Nutrition Employees Council ,
× RELATED அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன்...