காவேரிப்பட்டணத்தில் இளம்பெண் மர்ம சாவு

காவேரிப்பட்டணம், ஜூன் 21:. காவேரிப்பட்டணம் அடுத்த பையூர் அடுத்த கோனார்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன். ஓசூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயப்பிரியா(22). இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.
திருமணத்தின்போது ஜெயப்பிரியாவுக்கு போட்ட நகைகளை, சிலம்பரசன் குடும்பத்தினர் அடகு வைத்துள்ளனர். இந்த நகைகளை, ஜெயப்பிரியாவின் குடும்பத்தினரை மீட்டுக்கொடுக்கும்படி, சிலம்பரசனின் குடும்பத்தினர் தினமும் ஜெயப்பிரியாவிடம் தகராறு செய்து வந்துள்ளனர். இதுகுறித்து ஜெயப்பிரியா, நேற்று முன்தினம் தனது தந்தை முருகனுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில், முருகனுக்கு போன் செய்த சிலம்பரசன், உங்களது மகள் இறந்துவிட்டார், அவரது சடலம் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் உள்ளது என கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து, முருகன் உறவினர்களுடன் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு வந்தபோது மகள் உயிரிழந்தது தெரிந்தது.

பின்னர், இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசில் முருகன் புகார் அளித்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். நேற்று காலை இசசம்பவம் குறித்து ஆர்டிஓ சரவணன், டிஎஸ்பி பாஸ்கரன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

Tags : death ,
× RELATED காவேரிப்பட்டணம் அருகே பரபரப்பு தவறான சிகிச்சையால் தொழிலாளி திடீர் சாவு