ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் 15 பவுன் திருட்டு

கிருஷ்ணகிரி, ஜூன் 21: காவேரிப்பட்டணம் அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டில், 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவேரிப்பட்டணம் அருகே உள்ள சப்பானிபட்டியை சேர்ந்தவர் ராஜவேல். இவரது மனைவி மஞ்சுளா(40). இவர் அதேபகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் மதியம், இவர் தனது வீட்டை பூட்டி விட்டு சாவியை தனது கணவர் டூவீலர் முன்பு உள்ள கவரில் போட்டு விட்டு கடைக்கு சென்றுவிட்டார். ராஜவேலும் வெளியே சென்றிருந்தார். சிறிது நேரத்திற்கு பின், மஞ்சுளா வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திரந்த 15 பவுன் தங்க நகைகள் திருடு போயிருப்பது தெரிந்தது. இதுகுறித்து மஞ்சுளா அளித்த புகாரின் பேரில், காவேரிப்பட்டணம் போலீசார் நடத்திய விசாரணையில், மஞ்சுளா டூவீலர் முன்பு உள்ள கவரில், சாவியை தினமும் வைத்து விட்டு செல்வதை நோட்டமிட்டு வந்த மர்ம ஆசாமிகள், சாவியை எடுத்து கதவை திறந்து நகையை திருடிச்சென்றிருப்பது தெரிந்தது. தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : theft ,hotel owner ,house ,
× RELATED வீடு புகுந்து நகை திருட்டு