சர்வதேச யோகா தினவிழா

காவேரிப்பட்டணம்,  ஜூன் 21:  காவேரிப்பட்டணத்தில், சர்வதேச யோகா தின விழா நடந்தது. காவேரிப்பட்டணம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், அரிமா சங்கம், மனவளக்கலை மன்றம், பதஞ்சலி யோகா சமிதி, பாரத சாரணர் சங்கம் ஆகியவை சார்பில், சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. உடற்கல்வி இயக்குநர் பவுன்ராஜ் வரவேற்றார். தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமை தாங்கினார். அரிமா சங்க முன்னாள் தலைவர் விஜயராஜ், மனவளக்கலை மன்ற தலைவர் குமார், பதஞ்சலி யோகா சமிதி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாணவர்களுக்கு பல்வேறு வயது பிரிவுகளில் யோகாசனப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஒரே சமயத்தில் 1200 மாணவர்கள், சூரிய நமஸ்கார பயிற்சி செய்தனர். மனவளக்கலை மன்ற நிர்வாகிகள் கைப்பயிற்சிகள், கண் பயிற்சிகள் மற்றும் மூச்சுப்பயிற்சிகள் செய்து காண்பித்தனர். பிறகு, யோகாவின் பயன்கள் குறித்து கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில் பேராசிரியர்கள் வெங்கடேசன், ராஜூ, அரிமா சங்க நிர்வாகிகள் அசோக்குமார், பாஸ்போர்ட் செந்தில், மாது, குமார் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுரேஷ்பாபு, ராகவன், கஸ்தூரி ஆகியோர் செய்திருந்தனர். உதவி தலைமை ஆசிரியர் பால்ராஜ் நன்றி கூறினார்.

Tags : International Yoga Festival ,
× RELATED போச்சம்பள்ளி அருகே பரபரப்பு 3...