கடத்தூர் அரசு மகளிர் பள்ளியில் உணவு பாதுகாப்பு தின விழிப்புணர்வு

தர்மபுரி, ஜூன் 21: தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில், கடந்த இரு வாரங்களாக உலக உணவு பாதுகாப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் வெங்கடேசன் வழிகாட்டலின்படி, நேற்று கடத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், உணவு பாதுகாப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி துணை தலைமை ஆசிரியை கவிதா தலைமை வகித்தார். கடத்தூர் வணிகர் சங்க தலைவர் கண்ணப்பன் முன்னிலை வகித்தார்.  மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், உலக உணவு பாதுகாப்பு தின விழிப்புணர்வு மற்றும் செயல் விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில், உணவு பொருட்களில் கலப்படத்தை எளிதில் கண்டறியும் வழிமுறைகள் குறித்து, செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், உணவு பொருட்களில், தயாரிப்பு முகவரி, தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி ஆகியவற்றை சரிபார்த்து வாங்க வேண்டும் என கூறப்பட்டது. நிகழ்ச்சியில், உதவி தலைமை ஆசிரியை கவிதா, உடற்கல்வி ஆசிரியை தென்றல், ராஜேந்திரன், ஆசிரியர், ஆசிரியைகள், மாணவிகள் மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Kadathur Government Girls School ,
× RELATED போராட்டத்தில் ஈடுபட்ட 450 பேர் மீது வழக்கு பதிவு