×

பொய்யப்பட்டியில் கிளை நூலகத்தை விரிவுபடுத்த கோரிக்கை

அரூர், ஜூன் 21: அரூர் அருகே பொய்யப்பட்டியில் உள்ள கிளை நூலகத்தை விரிவுபடுத்த ேவண்டும் என மக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.
தீர்த்தமலை ஊராட்சி பொய்யப்பட்டியில் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தீர்த்தமலை, பொய்யப்பட்டி, வீரப்பநாய்க்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களின் பயன்பாட்டிற்காக, பொய்யப்பட்டியில் கிளை நூலகம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், நூலகம் சிறிய அளவில் இருப்பதால், புத்தகங்கள் வைப்பதற்கும், வாசகர்கள் அமர்வதற்கும் போதுமான இட வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த நூலத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க ேவண்டும் என பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : branch library ,
× RELATED குளித்தலை கிளை நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி பட்டறை